திருச்சியில் தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசின் பாஸ்போர்ட் அலுவலக முன்பு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், என்ற வாசகத்துடன் முதலமைச்சரின் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசின் பாஸ்போர்ட் அலுவலக முன்பு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், என்ற வாசகத்துடன் முதலமைச்சரின் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் மக்களவைத் தொகுதி மறு வரையறை தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து நாடாளுமன்றத்தில் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ள தில்லைநகர் வணிக வளாகத்தில் திமுக சார்பில்
M.K.Stalin for #FailDelimitation
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்துடன் கூடிய முதலமைச்சரின் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனர் தொகுதி மறு வரையால் மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதை எடுத்துரைக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டுள்ளது