தமிழக அரசு குறித்தும் முதல்வர் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிடும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக ஐ.டி விங்க் சார்பில் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
தமிழக அரசு குறித்தும் முதல்வர் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிடும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக ஐ.டி விங்க் சார்பில் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
முகநூலில் திருச்சிராப்பள்ளி மற்றும் சேக்தாவூத் திருச்சிராப்பள்ளி ஆகிய இரண்டு கணக்குகளை வைத்துள்ள நபர்கள் தொடர்ந்து திமுக குறித்தும் முதல்வர் குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவர்களின் கருத்துக்கள் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் எனவே அந்த முகநூல் கணக்குகளை கொண்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில்
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.