*பெண்கள் அதிகாரத்தில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது – 1973 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர் – தமிழ்நாட்டில் தற்போது 250 க்கு மேற்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது – மகளிர் தின விழாவில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் பேச்சு*
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சாதன மகளிர் அமைப்பு சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது
இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பிரின்ஸி மெர்லின், துணை முதல்வர் சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இதில் காவல் ஆணையர் பேசும்போது:
இந்திய அரசியலமைப்பு 15 படி சாதி, மதம் , இனம் மற்றும் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது
மேலும் இந்திய அரசியலமைப்பு 243 டி பிரிவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது
இதை கொண்டுவந்தாதன் மூலமாக பெண்களுக்கு இடஒதுக்கீடு வந்தது
பெண்கள் அதிகாரத்தில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது 1973 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இந்தியாவில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் துவங்கப்பட்டது
தற்போது தமிழகத்தில் 250- க்கு மேல் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது
தமிழ் நாடு வழக்கு பதிவு செய்வதில் முன்னோடி மாநிலமாக உள்ளது
சைபர் கிரைம் மூலம் மிரட்டல் வந்தால் ஆன் லைன் மூலமாக புகார் அளிக்கலாம் அவர்களது புகார்தாரரின் விபரம் பாதுகாக்கப்படும்
பெண்கள் பொருளாதாரத்திள் யாரையும் நம்பி இல்லாமல் பொருளாதார சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாதனா மகளிர் அமைப்பின் தலைவர் கெட்சி சர்மிளா, துணை தலைவர் கவிதா, செயலர் கிருபை, ,இணை செயலாளர் கெந்தியா, கணக்காளர் ஜெஸ்ஸிக் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்..