மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு “திராவிட மாடலே வெல்லும்” என்ற பெயரில் முனைவர் தமீமுல் அன்சாரி நிஜாமி எழுதிய நூல் வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து இந்திய சோஷலிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் முனைவர் தமீமுல் அன்சாரி நிஜாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மரியாதைக்குரிய அகிலேஷ் யாதவ் அவர்கள் வெளியிட அவரது நண்பர் காமராஜ் ஜெயின் பெற்றுக் கொள்கிறார்.
மூத்த திமுக ஆளுமை மரியாதைக்குரிய திருச்சி செல்வேந்திரன் ஐயா அவர்களும், நாகூர் தர்ஹா பிரசிடெண்ட் கண்ணியமிகு கலீஃபா சாஹிப் அவர்கள்,
கர்நாடக முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய கவிஞர் லலிதா நாயக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளனர்.
இந்திய சோஷலிஸ்ட் கட்சி மாநில துணை தலைவர் சி.என் குமார் தலைமை தாங்குகிறார்.