Trending News Tamil News Website In Trichy

கவிஞர் நந்தலாலா மறைவு- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

0

திருச்சியை சேர்ந்த கவிஞர் நந்தலாலா மறைவு-

தமிழ்நாடு துனை முதலைமச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கே. என்.நேரு ,மெய்ய நாதன் நேரில் அஞ்சலி..

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது உடல் பெங்களூரில் இருந்து திருச்சி கருமண்டபம், விவேகானந்தர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அதிகாலை 2 மணி அளவில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் திருச்சி வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மறைந்த கவிஞர் நந்தலாலா இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்..

Leave A Reply

Your email address will not be published.