முதலமைச்சரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி-அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
திருச்சி
*தமிழ்நாடு முதலமைச்சரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி-அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்*
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் 57-வது வட்ட திமுக மற்றும் கே.எஸ்.சி , நண்பர்கள் குழு சார்பாக மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் ஏற்பாட்டில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. இறுதி நாளான இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்து போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த கபடி போட்டியில் முதல் பரிசு 50,000 ரூபாயும், 2-ம் பரிசு 30,000 ரூபாயும், 3-ம் பரிசு 20,000 ரூபாயும், 4-ம் பரிசு 10,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.