திருச்சி 27.02.2025
திருச்சியில் ரூபாய் 116.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பினை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
திருச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருச்சி செங்குளத்தில் 116 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். திருச்சி செங்குளம் காலனியில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணை வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மதுரை சரக மேற்பார்வை பொறியாளர் எட்வின் சுந்தர் சிங் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் இருளப்பன், உதவி செயல் பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]