முதல் வெற்றி ஆர்வத்தில் இங்கிலாந்து- நாளை ஆப்கானிஸ்தானுடன் மோதல்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி யின் 8-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நாளை (26-ந்தேதி) நடக்கிறது. இதில் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றன.இதனால் முதல் வெற்றியை பெறப்போவது இங்கிலாந்தா? ஆப்கானிஸ்தானா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 351 ரன் குவித்தும் தோற்றது பரிதாபமே. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்த போட்டியில் தொடர்ந்து பரிதாபமே. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்த போட்டியில் தொடர்ந்து நீடிக்கும் ஆர்வத்துடன் இங்கிலாந்து இருக்கிறது. அந்த அணியில் பென் டக்கெட், ஜோ ரூட், கேப்டன் பட்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
ஹஸ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 102 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. அதில் இருந்து மீண்டு இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் வேட்கையில் அந்த அணி உள்ளது.
இருஅணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.