Trending News Tamil News Website In Trichy

திருமணத்துக்கு பிறகு மொத்தமாக மாறினார்: நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் டிரஸ்சில் குத்தாட்டம்

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், இப்படம் படுதோல்வியை சந்தித்தது. கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார். 12 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்திற்கு பின் தனது கணவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது அவர் திருமணத்திற்கு பின் கணவருடன் நடத்திய பார்ட்டியில் செம கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் கிளாமர் உடையில், கணவர் மற்றும் நண்பர்களுடன் டான்ஸ் ஆடும் படங்களும் இருக்கிறது. திருமணத்துக்கு முன் வரை ஹோம்லியாக இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், பாலிவுட் படத்தில் நடித்துவிட்டு, திருமணமும் செய்த பிறகு படு கவர்ச்சியான உடைகளை அணிகிறார். அடிக்கடி பார்ட்டிகளுக்கு செல்கிறார் என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.

 

 

Leave A Reply

Your email address will not be published.