Trending News Tamil News Website In Trichy

பாஜக மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றிய காவலாளி அலுவலக மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு – தற்கொலையா தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை

0

திருச்சி- 14.10.26

பாஜக மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றிய காவலாளி அலுவலக மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு – தற்கொலையா தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை.

திருச்சி மாநகரம் புத்தூர் வண்ணாரப்பேட்டை அருகே திருச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில் காவல் பணிக்கு தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி மூலம் காவலாளிகள் பணி அமர்த்தப்படுவார்கள். அந்த வகையில் அந்த ஏஜென்சியில் பணியாற்றும் திருச்சி ஜீயபுரத்தை சேர்ந்த கணேசன்(60) என்பவர் கடந்த ஒரு வார காலமாக பாஜக அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.அந்த அலுவலகத்திற்கு இன்று பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் வேலூர் இப்ராஹிம் வருகை தந்ததை முன்னிட்டு இன்று காலை பாதுகாப்பிற்காக போலீசார் பாஜக அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அலுவலக கதவை திறந்து விட்டு அவர்களை கணேசன் அமர வைத்துவிட்டு மாடிக்கு சென்றுள்ளார். திடீரென அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கணேசன் கீழே விழுந்துள்ளார். அவரை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சென்று பார்த்த பொழுது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து அவர்கள் அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பணியில் இருந்த காவலாளி திடீரென மாடியில் இருந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏன் இரண்டாவது மாடிக்கு சென்றார் ? தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.