திருச்சி அதிமுக செயலாளருக்கு எதிராக முன்னாள் பகுதி செயலாளர் போர்க்கொடி – ஜாதி ரீதியாக செயல்படும் மாவட்ட செயலாளர் மாற்ற வேண்டும் என பேட்டி
அதிமுகவின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் சீனிவாசன் இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் திருச்சி மாநகராட்சியின் துணைவியாக இருந்து வந்தார் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பொழுது சீனிவாசன் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றினார் அதன் பின் மீண்டும் அவர் அதிமுகவில் இணைந்தார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பின் அக்கச்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் பிரிந்து தனியாக செயல்பட தொடங்கினார அப்போது திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓ.பி.எஸ் ஆதரவாளராக மாறினார். அதனால் அவர் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி காலியாக இருந்தது அந்த பதவிக்கு பலர் போட்டி போட்டு கொண்டிருந்தனர் இந்த நிலையில் முன்னாள் துணை மேயர் ஆன சீனிவாசனை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்தார்.
கட்சியிலிருந்து பிரிந்து சென்று மீண்டும் கட்சியில் இணைந்த சீனிவாசனை மாவட்ட செயலாளர் பொறுப்பில் நியமித்ததை பலர் எதிர்த்து வந்தனர் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த பலர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர் அவர் குறித்து பல குற்றச்சாட்டுகளை கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து சிலர் வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் திருச்சி மார்க்கெட் பகுதி அதிமுக செயலாளராக இருந்த சுரேஷ் குப்தா என்பவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்,
1985 ஆம் ஆண்டு முதல் நான் ஆகிய அதிமுகவில் இருந்து வருகிறேன் பல்வேறு பொறுப்புகளையும் வைத்து வந்துள்ளேன் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளராகவும் பதவி வைத்து வந்தேன் இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக சீனிவாசன் பொறுப்பேற்றதிலிருந்து தன்னை ஜாதி ரீதியாக ஒதுக்கி வைத்து வருகிறார் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை போல பலரையும் அவர் கட்சியில் ஒதுக்கி வைத்தே வந்துள்ளார் இந்த நிலையில் அவருக்கு எதிராக செயல்படுவதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்னால் என்னை பகுதி செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் என்னை போலவே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பலரையும் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார்.
தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிமுக தொண்டர்களுக்கு எதிராக செயல்படும் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையையும் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் நடத்த உள்ளேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் சீனிவாசனை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால் தான் திருச்சியில் அதிமுக வெற்றி பெறும் அதனை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் நிலவி வந்த கோஷ்டி பூசல் இன்று சுரேஷ் குப்தா பேட்டியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது