தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றி- திருச்சியில் த.வெ.க சார்பாக கொண்டாட்டம்
திருச்சி 9.10.2026
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி- திருச்சியில் த.வெ.க சார்பாக இனிப்பு வழங்கி, விசில் ஊதி கொண்டாட்டம்.
தமிழக வெற்றிக் கழகம் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை முன்னிட்டு
திருச்சி தில்லை நகர் பகுதியில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது.
இக்கொண்டாட்டத்தில் மத்திய மாவட்டத் தலைவர் எம். செந்தில்,மாநகரத் தலைவி சந்திரா, தில்லை நகர் பகுதிச் செயலாளர் கண்ணன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டேனியல் ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும்,
கழகத்தின் வெற்றிச் சின்னமான விசில்களைப் பரிசளித்தும், பட்டாசுகளை வெடித்தும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை உற்சாகமாக வெளிப்படுத்தினர்.
