Trending News Tamil News Website In Trichy

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது படைக்கப்பட்ட புது சாதனை

0

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்தே வெளியேறி உள்ளது.

இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் போட்டியின் போது ஆன்லைன் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்கப்பட்டது. அதன்படி இந்த போட்டியை ஜியோ ஹாட் ஸ்டாரில் மொத்தம் 60.2 கோடி போ் ஒரே நேரத்தில் பாா்த்துள்ளனா்.

போட்டியின் முதல் பந்து வீசப்படும்போது 6.8 கோடியாக இருந்த பாா்வையாளா்கள் எண்ணிக்கை நேரம் செல்லச் செல்ல உயா்ந்தது. பாகிஸ்தான் ஆட்டம் முடியும்போது 32.2 கோடியாக இருந்த எண்ணிக்கை இந்தியாவின் இன்னிங்ஸ் தொடங்கும்போது 36.2 கோடியாக அதிகரித்தது. இறுதியில் இந்தியாவின் வெற்றித் தருணத்தில் 60.2 கோடி பாா்வைகளை பெற்று ஆன்லைனில் புதிய சாதனை படைத்தது.

Leave A Reply

Your email address will not be published.