இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மகா சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலமாக தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு பனியையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.
இன்று காலை 6:40 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் மலையேறினர். 4 முதல் 5 மணிநேரம் நடந்து சென்று தரிசனம் செய்தனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
நாளை (26-ந் தேதி) இரவு சிவராத்திரி நாளை மறுநாள் மாசி மாத அமாவாசையை (28-ந் தேதி) முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள். இதை யொட்டி மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. சிவராத்திரைய முன்னிட்டு வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.