திருச்சியில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா
திருச்சி 17.09.2025
*நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டார்*
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா திருச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது
இதில் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கொடியை அறிமுகம் செய்தார்
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில்:
கொடியில் மூன்று வண்ணங்கள், மேலே பச்சை, நடுவில் மஞ்சள், கீழே சிவப்பு. கொடியின் மத்தியில் பெருவிரலை உயர்த்தி காட்டும் வெற்றிக் குறியீடு உள்ளது
கொடியில் பச்சை நிறம் என்பது தூய நீர், தூய மண் வளம், தூய காற்றின் குறியீடாகவும், விவசாயிகளின் மேம்பாடு நீர்நிலை ஆதாரங்கள் விரிவு படுத்துதல் புதிய அணைகள் கட்டி விவசாயத்தில்
தண் நிறைவு பெற்ற வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை கொண்டு வருதல், புத்துணர்ச்சியும் மனதில் நம்பிக்கை உணர்வையும் மேலோங்க செய்கிறது.
மஞ்சள்நிறம் என்பது மங் களகர மானது உடல் ஆரோக்கியம் பொருளாதார மேம்பாடு, ஒவ்வொரு தொண்டனின் உடல் ஆரோக்கியம்,சந்தோஷத்தின் குறியீடு,
சிகப்பு நிறம் என்பது தேச பாதுகாப்பு வலிமை வாய்ந்த இந்திய ராணுவ கட்டமைப்பு அனைத்து உரிமைகளுக்கும் போராடக்கூடிய குறியீடு, எதையும் தைரியத்துடன் எதிர் கொள்ளுதல் வாழ்க்கையில் ஒவ்வொரு தொண்டனும் ஒவ்வொரு விஷயத்தை தைரியத்துடன் எதிர் கொள்ள வேண்டும்.
நடுவில் இருக்கக்கூடிய உயர்த்திய கட்டை விரல் அனைத்திலும் வெற்றி என்பதின் அடையாளமாகும்.
தமிழக – கேரள எல்லையில் தேனியில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி, கண்ணகி பிறந்த மண் பூம்புகாரில் இருந்து கண்ணகி நீதி யாத்திரை டிசம்பர் மாதம் நடத்த உள்ளோம்.
மதுரையில் 26 ஆம் தேதி நடைபெறும் கட்சி துவக்க விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்
திமுக ஆட்சி திருப்திகரமாக உள்ளது
வருகின்ற 2026 ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம்.
234 தொகுதிகளில் 30,000 வாக்குகள் எங்களுக்கு உள்ளது
25 தொகுதிகளில் வாக்குவங்கி உள்ளது எனவே 25 தொகுதிகளில் போட்டியிடுவோம் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றால் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம்
விஜய் அரசியல் வருகை எழுச்சியாக உள்ளது வரவேற்கதக்கது என தெரிவித்தார்