Trending News Tamil News Website In Trichy

நான் வேற மாதிரி விமர்சனம்…

0

ஜோதிஷாவின் பாட்டி திடீரென்று மரணம் அடைகிறார். பிறகு அவரது அண்ணி மற்றும் 2 அண்ணன்கள் மரணம் அடைகின்றனர். இந்த மரணங்கள் தற்செயலாக நடக்கவில்லை, யாரோ திட்டமிட்டு கொன்றிருக்கின்றனர் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்படுகிறது. இதையடுத்து தீவிர விசாரணை தொடங்கும்போது, அவர்கள் ஏன் மரணம் அடைந்தார்கள்? அதன் பின்னணியில் இருப்பது யார் என்ற விவரம் தெரியவருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

பேமிலி சஸ்பென்ஸ் கிரைம் திரில்லரில் ஜோதிஷா அழகாகவும், துடிப்பாகவும் நடித்திருக்கிறார். கொலையாளி யார் என்று தெரிந்து நடுங்குவது பதற வைக்கிறது. அவரது ஜோடியாக வரும் ஷா, தனக்குக் கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்துள்ளார். இறுதியில் ஓரளவு நடிக்கவும் முயற்சித்துள்ளார். போலீஸ் உயரதிகாரி ஜி.நஷீர் பாஷா, ‘சித்தா’ தர்ஷன், ஜோதிஷாவின் அண்ணன்கள், அண்ணி, பாட்டி ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.

எஸ்.ஜவஹர்லால் எழுதி இயக்கியுள்ளார். வீட்டுக்குள்ளேயே நடக்கும் கதைக்கேற்ப எளிமையாகவும், இயல்பாகவும் ஜி.ஜெயபாலனின் கேமரா ஒளிப்பதிவு செய்துள்ளது. மா.சிவசங்கர் பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். ஓரிரு பாடல்களைக் கேட்கலாம். பின்னணி இசை பரவாயில்லை. திரைக்கதையில் விறுவிறுப்பை ஏற்படுத்தி, காட்சிகளில் இன்னும் கனத்தைச் சேர்த்திருக்க வேண்டும்.

 

 

Leave A Reply

Your email address will not be published.